வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:31 IST)

உயர்நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

உயர்நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து, சொத்து விவரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகர் விஷால் அனைத்து வங்கி கணக்கு மற்றும் அசையா சொத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
லைகா நிறுவனத்திடம் பெற்ற கடன் விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முழுமையான தகவல்களை நடிகர் விஷால் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பு புகார் செய்தது.
 
இதனையடுத்து சொத்து விவரங்களை தாக்க செய்ய நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர் தற்போது தனது சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
 
Edited by Mahendran