கொசஸ்தலை ஆற்றில் பயங்கர வெள்ளம்.. மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!
கொசஸ்தலை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை புதல் கன மழை வரை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்தது. இதனை அடுத்து கொசஸ்தலை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்
மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் இன்று மாலை திறக்கப்பட உள்ளதாகவும், நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Edited by Mahendran