1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala visit jayalalitha memorial today

இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

காவல்துறை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ள நிலையில் சென்னை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அதிமுக கண்டதை அடுத்து அரசியல் களத்தில் சசிகலா குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது
 
ஒருபக்கம் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலா தீவிர அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் சசிகலாவுக்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
உடன்பிறப்பே: திரை விமர்சனம்