செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (11:28 IST)

கிட்டத்தட்ட முடிந்தது வாக்கு எண்ணும் பணி; 2 மணிக்கு முழு ரிசல்ட்!

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 2 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மநீம, நாதக கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணியில் 98% நிறைவடைந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மொத்த தேர்தல் முடிவுகளும் மதியம் 2 மணிக்குமேல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.