1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 அக்டோபர் 2021 (08:37 IST)

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: பாதுகாப்பு கேட்டு மனு!

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி சசிகலா செல்ல இருப்பதாகவும் அதற்காக தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் இருந்து காவல்துறை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலையான சசிகலா ஜெயலலிதா சமாதி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தான் ஜெயலலிதா சமாதி செல்ல முடிவு செய்து உள்ளார். இதனை அடுத்து அவரது தரப்பில் இருந்து காவல்துறை ஆணையருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து ஜெயலலிதா சமாதியில் வழிபட்ட பின்னர் சசிகலா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.