1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (08:01 IST)

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதை அடுத்து கடந்த சில நாட்களாக தினமும் 30 நாட்களுக்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு ரூபாய் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலை 30 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.70
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.98.59