1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala to get two more year imprisonment for corruption case

சசிகலாவிற்கு ரெடியாகும் அடுத்த ஆப்பு: 2 வருடம் கூடுதல் சிறை?

சசிகலா
சசிகலாவிற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன். 
 
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யும் என கூறப்பட்டது. 
 
ஆனால், தற்போது கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கூறினார். 
 
சமீபத்தில் சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றது, சிறையில் தனியாக சமைத்தது, 5 செல்களை பயன்படுத்தி வந்தது அனைத்தும் உண்மை என தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது சசிகலாவுக்கு விதிமுறைகள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது சசிகலா தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
 
தற்போது இந்த லஞ்சம் கொடுத்த விவாகரத்தை பற்றிய விசாரணை நடந்து வரும் நிலையில், இதனை காரணம் காட்டி அவருக்கு மேலும் 2 வருடம் சிறை தண்டனை அதிகரிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இது சசிகலா தரப்பினருக்கு பேரிடியாக விழுந்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பாட்டு, டான்ஸுனு ஓரே லூட்டி: தமிழிசையின் அட்ராசிட்டிய பாரூங்க...