தொடர்புடைய செய்திகள்
- ஜாமீன் கிடைத்தும், ப.சிதம்பரத்திற்கு சிறையே கதி!!
- சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை!
- முதல்வர் பழனிசாமி’ கால்களுக்குள் நெளிந்து’ போவார்!” - ஸ்டாலின் ’கிண்டல்’
- ராஜீவ் கொலை கைதி முருகனிடம் ஸ்மார்ட்போன்: அதிர்ச்சி தகவல்
- சசிகலாவின் ஒற்றை லட்சியம் என்ன? டெல்லியில் லீக் செய்த வக்கீல்!
கர்நாடக சிறைத்துறைக்கு நன்கொடை கொடுத்த சசிகலா !
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அமைக்கப்படவுள்ள சமுதாய வானொலிக்கு சசிகலா நன்கொடை அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை இரண்டு முறை பரொல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா உருவான நவம்பர் 1 ஆம் தேதி அவர் நன்னடத்தைக் காரணமாக விடுவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.
ஆனால் நன்னடத்தை விதிகள் அவருக்குப் பொருந்தாது என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் ஆரம்பிக்க இருக்கும் சமுதாய வானொலிக்காக சிறைக்கைதிகள் அனைவரிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. வானொலிக்காக சசிகலாவும் கணிசமான ஒரு தொகையை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
