1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:00 IST)

சசிகலாவின் ஒற்றை லட்சியம் என்ன? டெல்லியில் லீக் செய்த வக்கீல்!

சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவை கைப்பற்றுவது தான் சசிகலாவின் முக்கிய லட்சியம் என உலறி கொட்டியுள்ளார் ராஜா செந்தூர் பாண்டியன்.
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். சசிகலா சிறைக்கு சென்றதும் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஓரம்கட்டப்பட்டு, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றிணைந்தனர். 
 
இதனால் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்க அமமுக எனும் கட்சியை துவங்கினார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் மஜாஆன தின்கரன் அடுத்தடுத்த தேர்தலில் தோல்வியை தழுவ, சமீப காலமாக தேர்தலில் இருந்து ஜகா வாங்கி வருகிறார். 
இந்நிலையில், அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலையில் மும்முறமாக ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், அம்முக வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பின்வருமாறு பேசினார், மறைந்த தலைவர் ஜெயலலிதா, ஒரு பொதுவான தலைவர். அதனால் அவரது பெயரான அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்த யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. 
விரைவில் அமமுக கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என நம்புகிறோம். இதில் குறிப்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் முக்கிய லட்சியமே அதிமுகவை கைப்பற்றுவதுதான். அதில் எந்த மாற்றமும் கிடையாது என தெரிவித்துள்ளார். 
 
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர், என்னை எந்த கூட்டில் அடைத்தாலும் கட்சி வளர்ச்சியை நோக்கித்தான் எனது எண்ணம் இருக்கும். என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.