தொடர்புடைய செய்திகள்
- சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ யோசனை!
- ’’மனித நேயம் இருந்தால் போதும்!’’;டெல்லி போராட்டம் குறித்து முன்னணி நடிகை கருத்து...
- வேலூர்ல வரவேற்பா.. ப்ளானை மாற்றிய எடப்பாடியார்! – சசிகலாவுடன் மோதல் ஆரம்பமா?
- தியாக தலைவி வருகையை திருவிழாவாய் கொண்டாடுவோம்! – டிடிவி தினகரன் அறிக்கை!
- 7ம் தேதிக்கு பதில் 8ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - தினகரன்!
சசிகலாவின் தமிழக வருகை… தேதியில் திடீர் மாற்றம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலா தமிழகம் வரும் தேதியில் சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் குணமாகியுள்ளதால் பிப்ரவரி 7ம் தேதி பெங்களூரிலிருந்து தமிழகம் வர உள்ளதாகவும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அவர் பிப்ரவரி 8 ஆம் தேதிதான் தமிழகம் வர உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து அவர் குணமாகிவிட்டாலும் தனிமைப்படுத்துதலை முடித்துக்கொண்டு வருவதற்கே இந்த ஒருநாள் தாமதம் என சொல்லப்படுகிறது.
