திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:54 IST)

தியாக தலைவி வருகையை திருவிழாவாய் கொண்டாடுவோம்! – டிடிவி தினகரன் அறிக்கை!

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட சசிக்கலா தமிழகம் வரும் நிலையில் அதை திருவிழாவாய் கொண்டாட டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தல் காரணமாக பெங்களூர் பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் அவர் பிப்ரவரி 8ம் தேதி தமிழகம் வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்! ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம்!” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.