’’மனித நேயம் இருந்தால் போதும்!’’;டெல்லி போராட்டம் குறித்து முன்னணி நடிகை கருத்து...
இந்தியாவில் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை உலகமே கவனிக்கிறது என பிரபல நடிகை அமண்டா செர்னி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், விவசாயிகள் சுமார் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பிரபல போர்னோ நடிகையான மியா கலீஃபாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிதிருந்தார்.
அதில், டெல்லியில் மனித உரிமை மீறல்… புதுடெல்லியில் இணையத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதா? நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன் எனக் கூறினார்.
ஆனால், இவருக்கு எதிராக நெட்டிசன்கள் எதிர்ப்புத்தெரிவித்து நேற்று ஹேஸ்டேக் உருவாக்கினர். இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே,பாடகி ரிஹானா, டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தலைவி பட நாயகி, கங்கனா, அவரை முட்டாள் எனக்கூறியதுடன் , அவர்கள் விவசாயிகள் அல்ல, நாட்டைத்துண்டாட முயல்கிற தீவிரவாதிகள் எனக் கூறினார். இன்று பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கர், ரிஹானாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அதில், உள்நாட்டுப் பிரச்சனைகளில் வெளிநாட்டவர் தலையிடக்கூடாது. பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளும் என ரிஹானாவிற்கு லதா மங்கேற்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதேசமயம் ரிஹானா எந்த மதமென்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க நாட்டில் பிரபல ஹாலிவுட் நடிகை, அமண்டா செர்னி டெல்லி விவசாயிகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில்,. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை உலகமே கவனிக்கிறது. பிரச்சனையை எதிர்க்கொள்வதற்கு இந்தியராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை; மனித நேயம் இருந்தாலே போதும் எனத் தெரிவித்துள்ளார்.