1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:11 IST)

சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ யோசனை!

சசிகலா வருகையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

 
சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் குணமாகியுள்ளதால் பிப்ரவரி 8ம் தேதி பெங்களூரிலிருந்து தமிழகம் வர உள்ளதாகவும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
 
பிப்ரவரி 8ம் தேதி சசிக்கலா வரும் நிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்க வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் ஏற்பாடாகி வருகிறது. இந்நிலையில் சசிகலா வருகையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாப்ன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.