1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala Silent in Dinakaran Meeting

தினகரனிடம் பேசாமல் திருப்பி அனுப்பிய சசிகலா!

தினகரன்
ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று நாளை பதவியேற்க உள்ள டிடிவி தினகரன் இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆசி பெற சென்றார்.
 
பெங்களூர் சிறைக்கு சென்ற டிடிவி தினகரனிடம் சசிகலா ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். தினகரன் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டு அவரிடம் பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டாராம்.
 
இதற்கு காரணம் சசிகலா ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இருந்து மௌன விரதம் இருந்து வருவதாக டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். தான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தினகரன் கூறியதை கேட்ட சசிகலா அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தினகரன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
புத்தாண்டன்று கோயில்களைத் திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி