வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (14:52 IST)

நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு வேலை

நீட் தேர்வை எதிர்த்து போராடி, தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையை முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1200க்கு 1176 மதிப்பெண் 
பெற்றார். ஆனால் நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவி கடந்த செப்டம்பர் மாதம்  தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றது. இந்நிலையில் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்குவதாக கூறியது. ஆனால் அனிதாவின் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை வாங்க மறுத்தனர். இந்நிலையில் இன்று அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு தமிழக சுகாதார துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.