1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (15:20 IST)

சசிகலா மௌன விரதம்: சிறை வளாகத்தில் தினகரன் பரபரப்பு பேட்டி!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து ஆசி பெற பெங்களூர் சிறைக்கு இன்று சென்றார்.
 
ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு இன்று சென்றார்.
 
இந்த சந்திப்பின் போது சசிகலா மௌன விரதம் இருந்ததாக தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இருந்து சசிகலா சிறையில் மௌன விரதம் இருந்து வருவதாக கூறிய தினகரன் இந்த மௌன விரதம் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம் என தினகரன் கூறியுள்ளார்.