அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர்: சசிகலா
அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர் என சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சசிகலா இன்று அதிரடியாக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அதிமுக சட்ட விதிகளை மாற்ற யார் அதிகாரம் தந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா என்றும் அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்
பசுத்தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது என்றும் தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கியுள்ளது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.