அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரா எடப்பாடி?
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால், அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி எடப்பாடிபழனிசாமிக்கு கிடைக்கவிடாமல் ஓபிஎஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இது எந்த அளவு சாத்தியம் என்று வரும் 11ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் தான் முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.