1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops filed case against admk generalbody meeting

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஐகோர்ட் சென்ற ஓபிஎஸ்

ops
அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் ஐகோர்ட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் போது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது 
 
இதனையடுத்து இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய விசாரணையின்போது அதிமுக பொதுக்குழு தடை விதிக்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்பிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்புக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
 
 
About Writer
siva