செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (09:25 IST)

பெங்களூரில் இருந்து கிளம்பும் முன் சசிகலா செய்தது என்ன??

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு சென்னை திரும்பினார் சசிகலா. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார்.  பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். 
 
அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனிடையே, பெங்களூருவில் இருந்து புறப்படும் முன்பு, அவர் தங்கி இருந்த விடுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். டிடிவி தினகரனும் மலர் தூவி ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினார்.