செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (15:54 IST)

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வர் – உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வர் – உதயநிதி ஸ்டாலின்
அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டி  திமுக தமிழகம் முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, திமுக ஆட்சிக்கு வந்ததும்  ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வர் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் விடியலை நோக்கி என்ற பெயரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையொஇல் இன்று திருவாரூர் மாவட்டத்தில்  பிரசாரம் செய்த உதயநிதி,  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பிரதம மந்திரிகிசான் திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வர் – உதயநிதி ஸ்டாலின்

மேலும், கமல்ஹாசன் சமீபத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுடன் பேசியதாகத் தெரிகிறது. இதில், 40 தொகுதிகள் வரை தனக்கு வேண்டுமென கமல்ஹாசன் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இதனால் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.