’’முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி’’- முதல்வருக்கு கமல் பதிலடி

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
Sinoj| Last Modified வியாழன், 17 டிசம்பர் 2020 (19:59 IST)


நடிகர் கமல் நாட்டை ஆள நினைத்தால் ஒரு குடும்பம் கூட உருப்படாது என முதல்வர் பழனிசாமி கமலை கடுமையாக தாக்கிப் பேசியிருந்த நிலையில், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி என நடிகர் கமல்ஹாசன் முதல்வருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.


அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார். அன்றாடமும் அவர் ஆளும் கட்சியை விமர்சித்துவரும் நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை தாக்கிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது :

அதில், நடிகர் கமல்ஹாசன் நாட்டை ஆள வேண்டுமென்று நினைத்தால் ஒரு குடும்பம் உருப்படாது. தனது படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் குடும்பங்களை கமல் சீரழிக்கிறார் என்று இன்று அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்துவருகிறது.இதில் மேலும் படிக்கவும் :