வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (15:44 IST)

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய போது முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது. அடுத்த மாநாடு மதுரையில் நடந்த போதும் அதே அளவு கூட்டம் கூடியது.

அதன்பின் தவெக தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்திய போது, 20 ஆயிரம் பேர் வரை கூடியதில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தவெகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்பின் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து விஜய் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்..

சமீபத்தில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். இந்நிலையில்தான் தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம் வருகிற 23ம் தேதி வேலூரில் நடைபெறவிருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்திற்காக 33 ஏக்கரில் ஏற்பாடுகளை செய்து வருவதாக தவெகவினர் கூறுகிறார்கள்.

மேலும், இந்த கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் எனவும் அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்..