1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment about tn budget

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

eps
தமிழக சட்டசபையில் 2026 -27ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். தேர்தல் விரைவில் நெருங்கவுள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தார்கள்..

அப்போது சட்டசபையில் பேசிய தங்கம் தென்னரசு ‘மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வருவதால் இந்த திட்டம் மூன்று மாதம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் 6,500 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.. இதனால் தமிழ்நாடு இன்ப அதிர்ச்சியில் இருக்கிறது’ என்றெல்லாம் பேசினார்..

மேலும் பள்ளிக்கல்வித்துறைக்கு 48 ஆயிரத்து 534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.. அதோடு 2030ம் வருடத்திற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் எனவும் தற்போது 29 ஆயிரம் வீடுகள் கட்டுமான பணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதுபோக பல அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டார்..

இந்த பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும்.. ஆனால் உற்றுப் பார்த்தால் சொத்தையாக இருக்கும்.. அதற்கு உதாரணம் இந்த இடைக்கால பட்ஜெட். வரவு செலவு திட்டம் பற்றி உருப்படியாக இதில் எதுவும் இல்லை.. கடந்த ஐந்து ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்களால் நிறைந்த மேனாமினிக்கு உரையாகவே இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..