திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (12:07 IST)

கூட சென்றவர்களை விட்டு தனியா விடுதலையாகும் சசிகலா!

கூட சென்றவர்களை விட்டு தனியா விடுதலையாகும் சசிகலா!
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார். 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்ட வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி கட்டிமுடித்துள்ளதால் வரும் 27 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யப்படுவார். 
 
இந்நிலையில், ஜனவரி 27 அம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் இளவரசி சில நாட்கள் தாமதமாக பிப்ரவரி 5 ஆம் தேதி  விடுவிக்கப்படுகிறார். ஆனால், சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் சுதாகரன் விடுதலையில் இன்னும் அதிக தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.