தொடர்புடைய செய்திகள்
- ஒன்றிய அரசு என சொல்ல தடை விதிக்க முடியாது! – சென்னை உயர்நீதிமன்றம்
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- சும்மா கிண்டலுக்கா போட்டது அது.. தப்புனா மன்னிச்சுடுங்க! – வீடியோ வெளியிட்ட மேதகு இயக்குனர்!
- பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!
- கத ஒன்னும் இல்ல சார்… ஏதாவது நாவல் பக்கம் போவோம் – கமல்கிட்ட சொன்ன வெற்றிமாறன்!
கட்டளையிடுங்கள் சின்னம்மா.. காத்திருக்கிறோம்! – கோவையில் சசிக்கலா ஆதரவு போஸ்டர்!
அதிமுகவினரிடம் சசிக்கலா பேசி வரும் வீடியோக்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது சசிக்கலாவுக்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டரும் ஒட்டப்பட்டு வருகிறது.
அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். இதனால் சசிக்கலாவுடன் பேசி வரும் சிலர் சமீப காலமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் சசிக்கலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “கட்டளையிடுங்கள் சின்னம்மா காத்திருக்கிறோம். துரோகத்தை வெல்வோம்” என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
