வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மிதமான மழைப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,,புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.