1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala Parole Behind Secret Plan

பரோலில் வந்ததின் பகீர் பின்னணி: தினகரன் ரகசிய திட்டத்தால் சசிகலா அதிர்ச்சி!

பரோலில் வந்ததின் பகீர் பின்னணி: தினகரன் ரகசிய திட்டத்தால் சசிகலா அதிர்ச்சி!

சசிகலா
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதனால் அவரை சந்திக்க சசிகலா பரோலில் வந்தார். ஆனால் சசிகலா இவ்வளவு முயற்சிகள் எடுத்து பரோலில் வந்ததுக்கு காரணம் தினகரன் எடுத்து திடீர் முடிவு தான் என கூறப்படுகிறது.


 
 
அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றிவிடும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். எனவே தனக்காக கூடும் கூட்டத்தை நம்பி தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க தினகரன் ரகசிய திட்டம் ஒன்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இரட்டை இலை சின்னத்தை விட தனது பெயருக்கு தான் அதிக அளவு கூட்டம் கூடுகிறது என தினகரன் நம்புகிறார். எனவே இரட்டை இலை சின்னமே தேவையில்லை, தனியாக கட்சி தொடங்கி வெற்றி பெறலாம் என தினகரன் திட்டமிட்டுள்ளார்.
 
இந்த தகவலை கேட்ட சசிகலா அதிர்ந்துவிட்டாராம். இதனையடுத்து தினகரனை அழைத்து கோபமாக அறிவுறை வழங்கியுள்ளார். தனிக்கட்சி தொடங்கி காணாமல் போனவர்கள் நிறையபேர். பணத்தால் மக்கள் நம்பிக்கையை வாங்க முடியாது என கூறிய சசிகலா தினகரனை விட்டுவைத்தால் வேலைக்கு ஆகாது என கூறி பரோலில் வந்து நானே கட்சியை கையில் எடுக்கிறேன் என வந்துள்ளதாக மன்னார்குடி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
சட்டை பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்; வைராகும் வீடியோ