வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (10:50 IST)

நடராஜனை இன்று சந்திக்க செல்லும் சசிகலா...

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா இன்று தனது கணவர் நடராஜனை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள்  மட்டும் பரோல் கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சென்னை வந்ந சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கியுள்ளார்.
 
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் நடராஜனை சந்திக்க அவர் இன்று மருத்துவமனைக்கு செல்வார் என செய்திகள் வெளியாகியுள்ளது.