வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (09:55 IST)

சசிகலா கணவர் நடராஜனுக்கு செயற்கை சுவாசம்: தீவிர கண்காணிப்பு!

சசிகலா கணவர் நடராஜனுக்கு செயற்கை சுவாசம்: தீவிர கண்காணிப்பு!

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று பரோலில் வந்துள்ள சசிகலாவின் கணவருமான நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.


 
 
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா.
 
முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், நடராஜனின் உடல்நிலையில் இனி வரும் சில நாட்கள் அவருக்கு முக்கியமானவை எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவரை பார்க்க 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா இன்று குளோபல் மருத்துவமனை சென்று அவரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.