1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (12:04 IST)

பேஸ்புக் மக்களை பிரித்து வருகிறது - மன்னிப்பு கேட்கும் மார்க்

மக்களை ஒன்றிணைக்கவே தான் பேஸ்புக்கை உருவாக்கியதாகவும், ஆனால், அது மக்களை பிரித்து வருவதாகவும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.


 

 
உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் தற்போது பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், அதன் மூலம் பல தவறுகளும், பாதிப்புகளும் சமுதாயத்தில் ஏற்பட்டு வருவதை தவிர்க்க முடியவில்லை. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் “மனிதர்களை ஒன்றிணைக்கத்தான் நான் பேஸ்புக்கை உருவாக்கினேன். ஆனால், அதற்கு மாறாக அது மக்களை பிரித்து வருகிறது. நம்முடன் பழகியவர்களையும், நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களையும் தேடிக் கண்டுபிடித்து பழகுவதற்காகவே உருவாக்கியதுதான் பேஸ்புக். ஆனால், அது இன்று பலரது பிரிவிற்கும் காரணமாகிவிட்டது.
 
அதோடு, தனித்தனி அமைப்புகளாக பிரிந்து சண்டையிட்டு வருகிறார்கள். சிலரது காதலை சேர்த்து வைக்கும் பேஸ்புக், பலரது காதலை பிரித்து வைக்கிறது. இதை நானே கண்கூடாக பார்க்கும் போதும், நண்பர்கள் சொல்ல கேட்கும் போதும் வருத்தமாக இருக்கிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். 
 
என்னையும் எனது பேஸ்புக்கையும் மேம்படுத்தி கொண்டு இனி மக்களை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்” என மார்க் உருக்கமாக தெரிவித்துள்ளார்.