வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (21:56 IST)

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா ?

ஊழல் வழக்கில் சிறைசென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழில் சசிக்கலா சில மாதங்களுக்கு முன் விடுதலையானார்.

அவர் தமிழகம் வந்தபோது, சில நடிகர்களும் இயக்குநர்களும் அரசியல் தலைவர்களும் அவரைச் சந்தித்துப் பேசினர். தேர்தல் நெருங்கிய சமயத்தில் அவர் தான் அரசியலை விட்டு விலகுவதாக தெரிவித்தார்.

அவரது உறவினரான தினகரனின் அமமுக கட்சி தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஒரு இடத்திலும் வெற்றிபெறாமல் தோற்றது.

இந்நிலையில் சில நாட்களாகவே அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசிவரும் சசிகலா அதிமுகவை கைப்பற்றபோவதாகக் கூறிவந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வரும் ஜூலை 23 ஆம் தேதி சசிகலா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இங்கு சென்ற பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.