சசிகலாவுடன் பேச்சு... கட்சியில் இருந்து மேலும் சிலர் நீக்கம்!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (14:02 IST)
சசிகலாவுடன் பேசிய காரணத்திற்காக மேலும் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என தகவல். 

 
அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சசிகலாவுடன் பேசிய காரணத்திற்காக மேலும் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :