1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No one should act in support of Sasikala. OBS, EPS

சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.- ஓபிஎஸ், இபிஎஸ்

தமிழகம்
அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிகலாவுடன் பேசிய காரணத்திற்காக மேலும் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை உத்தரவிட்டது.

இந்நிலையில். மீண்டும் ஒரு ஆடியோ வெளியிட்ட சசிகலா விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என அறிவித்தார். இது அதிமுகவினடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைஒருங்கிணைப்பாளருமான ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்
நாளையும் கொரோனா தடுப்பூசி மையம் கிடையாது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு