1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sarathkumar says about koda nadu case

கொட நாடு வழக்கை மீண்டும் விசாரணை நடத்துவது தவறில்லை: சரத்குமார்

கொடநாடு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை மீண்டும் விசாரணை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த முடிவுக்கு அதிமுக கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக ஆதரவு கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வரும் சரத்குமார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரணை செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
 
மயிலாடுதுறையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற சரத்குமார் அதன் பின்னர் செய்தியாளர்களை பேசினார். அப்போது அவர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னைப் புகழ வேண்டாம் என்று கூறியதை தான் வரவேற்பதாகவும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறினார்
 
மேலும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த கூறுவதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சரத்குமாரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
About Writer
siva