1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:41 IST)

காபூலில் குடியிருப்பு ஒன்றின் மீது ராக்கெட் குண்டு வீச்சு!

காபூல் விமான நிலையம் அருகே கவாஜா பகஹ்ரா பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது.

 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடியும் கொடுத்தது. 
 
இந்நிலையில் நேற்று மாலை காபூல் விமான நிலையம் அருகே கவாஜா பகஹ்ரா பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில், குழந்தை உட்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் நடத்த அடுத்த சில நிமிடங்களில் காபூல் விமான நிலையத்தை நோக்கி மனித வெடிகுண்டாக காரில் வந்தவர்களை அமெரிக்க படையினர் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. 
 
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் ஆப்கான் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.