வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (20:01 IST)

பிரபல இயக்குநரின் மகள் கடையில் கொள்ளை!

தமிழ் சினிமாவில் பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களை வைத்துப் பல படங்களை இயக்கியவர் இயக்குநர் டி.பி.கஜேந்திரன். இவரது மகள் பெயர் முத்துலட்சுமி. இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் நிலையில் இக்கடையில் திருட்டுப் போயுள்ளது.

சென்னை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் கடையை நடத்தி வருபவர் டி.பி. கஜேந்திரனின் மகள் முத்துலட்சுமி.

இன்று காலையில் இக்கடையை ஊழியர் திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடப்பட்டுள்ளது. இதுபெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து, போலீஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அங்கிருந்த கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், 2 பேர் கொள்ளையடித்த்து தெரியவந்தது. இவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைகப்பட்டுள்ளது.