1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sarathkumar said Tenkasi will also separate a new district

இதையும் தனி மாவட்டம் ஆக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

தென்காசி
சமீபத்தில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'கள்ளக்குறிச்சி' என்ற தனி மாவட்ட அறிவிப்பை அறிவித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மேலும் சில புதிய மாவட்டங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும், கோவை, திருப்பூர் மாவட்டத்தின் ஒருசில நகரங்களை கொண்டு 'பொள்ளாச்சி' என்ற புதிய மாவட்டம் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி  மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  வரும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக வேலைசெய்வோம் என்றும், தேர்தல் வர உள்ள நிலையில் மக்களை ஈர்க்க தி.மு.க. ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்துவதாகவும், இதனை முன்பே நடத்தியிருக்கலாம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி