திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:32 IST)

தமிழகத்தின் 33வது மாவட்டம்: சட்டப்பேரவயில் முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் சற்றுமுன் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்துள்ளார்.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகிறது. புதியதாக உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை நகரங்கள் அடங்கும்