ஞாயிறு, 25 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (11:12 IST)

வேனில் 4 வயது சிறுமி கதற கதற கற்பழிப்பு: விளையாட்டு ஆசிரியரின் வெறிச்செயல்

தென்காசியில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் வேனில் வைத்து 4 வயது சிறுமியை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
 
இந்நிலையில் நேற்று காலை பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று விட்டு, பள்ளி வேனில் வீடு திரும்பினார். வீடு திரும்பிய சிறுமி மிகவும் சோகமாக காணப்பட்டதால், சிறுமியின் தாயார் சிறுமியிடம் விசாரித்தார்.
 
சிறுமி சொன்னதைக்கேட்ட அவரது தாயார் கதிகலங்கி போனார். வேனில் வைத்து சிறுமியை விளையாட்டு ஆசிரியர் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதற்கு அந்த வேனின் டிரைவரும் உடந்தை.
 
இதிர்ந்துபோன சிறுமியின் தாயார் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் அந்த விளையாட்டு ஆசிரியரையும், அந்த வேனின் டிரைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.