திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜனவரி 2019 (19:09 IST)

6 ஆம் நூற்றாண்டினை சார்ந்த சமணர் படுகைகளை பாதுகாத்து வரும் வாலிபர்

6 ஆம் நூற்றாண்டினை சார்ந்த சமணர் படுகைகளை பாதுகாத்து வரும் வாலிபர் – சுமார் 55 க்கும் மேற்பட்ட சமணர் படுக்கைகளையும், 7 மர்ம குகைகளையும் சுமார் 17 வருடங்களாக பாதுகாத்து வரும் வாலிபர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் வீற்றிருக்கும் புகழிமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி மலை என்பது எல்லோரும் அறிந்தது. இந்நிலையில், பண்டைய காலத்தில் கொங்கு நாட்டில் இது புகழ்பெற்ற முருகன் ஸ்தலமாக விளங்குவதோடு, ஆறுநாட்டார் மலை என்றும் அழைக்கப்படுவது வழக்கம், இந்த மலையானது அபூர்வ சக்தி கொண்டது.
 
இந்த மலையின் பாறைகள் மழையில் கரையும் தன்மை பெற்று இருப்பினும் இது இன்று வரை கரையாமல் பேணி பாதுகாக்கப்பட்டு வருவதே ஒரு அபூர்வம் தான், அது மட்டுமல்லாமல் 6 ஆம் நூற்றாண்டினை சார்ந்த சமண முனிவர்கள் இங்கே தான் உறங்குவதற்காகவும், சமணர் படுகைகள் சுமார் 55 க்கும் மேற்பட்ட படுகைகள் உடையதாகவும், விளங்குகின்றது. 
 
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இந்த ஸ்தலத்தினை மேலே பரமாரிப்பது இந்து சமய அறநிலையத்துறையினராக இருந்தாலும், இந்த மலையின் நடுவே உள்ள சமணர்படுகைகளையும், கல்வெட்டுகளையும் தொல்லியல் துறையினர் பாதுகாப்பில் இருக்கின்றது. அதே பகுதியை சார்ந்த, வேலாயுதம்பாளையம் பகுதியில், புகழிமலை அடிவாரத்தில் வசித்து வரும் சந்திரன் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்த சமணர் படுகைகளையும், அங்குள்ள மர்ம குகைகளையும் பேணி பாதுகாத்து வருவதோடு, இயற்கையோடு அங்கே வாழ்ந்து வருகின்றார். 
 
மலையில் மட்டுமே அவரது வாழ்க்கையாக இருந்தாலும் கீழே அடிவாரத்தில் அவ்வப்போது வந்து செல்வார். மேலும், அங்கே நெகிழிபைகளை கொண்டு வரவேண்டாம் என்றும், சுமார் 4 ற்கும் மேற்பட்ட கேட்டுகளுக்கு சாவி அமைத்து யாரையும் உள்ளே வராதவாறு பாதுகாத்து வருவதோடு, அங்கே வரும் பக்தர்கள் தியானம் செய்வதற்கும் உதவியாக இருந்து வருகின்றார். 
 
மேலும் அங்குள்ள 7 மர்ம குகைகளில் வசிக்கும் ஜீவ ராசிகளான பாம்புகள் மற்றும் ராட்சித விஷ சந்துக்களும் இவரோடு வாழ்ந்து வரும் நிலையில் இந்த புகழிமலையின் தொன்மையை பறைசாட்ட இவர் அரும்பாடு பட்டு வருகின்றார். கடந்த 17 ஆண்டுகளாக மலையோடும், சமணர் படுகைகள் மற்றும் குகைகளோடு அங்கேயே நாள் ஒன்றுக்கு சுமார் 20 மணி நேரம் தங்கி தியானத்தையும் மேற்கொண்டு வரும் அந்த நபர், மற்ற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் தியானம் செய்வதற்கும் உறுதுணையாக இருந்து வருகின்றார். 
 
ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையை விட சிறிய மலையாகவும், சுமார் 300 க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை மட்டுமே கொண்ட இந்த புகழிமலையின் நடுவே, அக்காலத்தில் விலங்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக சமணர்களும், சமண முனிவர்களும் வாழ்ந்து வந்த 6 ஆம் நூற்றாண்டினை சார்ந்த இந்த குகைகளும், கல்வெட்டுகளும், படுகைகளும் காலத்தினால் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் ஆகும்.