தேர்தலுக்கு முன் காங்கிரஸ், தேர்தலுக்கு பின் பாஜக: திமுகவின் பலே திட்டம்

Last Modified வெள்ளி, 11 ஜனவரி 2019 (21:35 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டு, தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் பாஜக அரசுக்கு ஆதரவு தர திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மோடி அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் அதே நேரத்தில் மீண்டும் மோடி தலைமையான பாஜக அரசு ஆட்சியை பிடிக்கும் நிலை
வந்தால் திமுக ஆதரவு அளிக்கும் என்றே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


மேலும் ஒருவேளை மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் நிலை வந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் எப்படி இருந்தாலும் அடுத்த ஆட்சியில் திமுக மந்திரிகள் இடம்பெறுவது உற்தி என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :