ஆகஸ்டு 25ம் தேதி விஜய் - சங்கீதா ரீயூனியன்?!.. இணையத்தில் பரவும் செய்தி!...
முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் தனது கணவர் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையில் அவரால் விசாரணையில் சரிவர கலந்து கொள்ள முடியவில்லை.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜயும் சங்கீதாவும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரானார்கள். அதேபோல் ஆகஸ்ட் 7ம் தேதியான நேற்று விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லண்டனில் இருந்து சங்கீதா மட்டுமே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரானார்.
ஆனால் விஜய் ஆஜராகவில்லை. அதோடு இந்த விவகாரத்து வழக்கை வாபஸ் பெற்று கொள்வதாக நேற்று சங்கீதா நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்று விட்டதால் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்களா என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தனது அப்பா விஜய் பற்றி உயர்வாக பேசியிருந்தார். தற்போது சங்கீதாவும் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார். வருகிற 25ம் தேதி விஜய்க்கு 27வது திருமண நாள் வருகிறது. அப்போது இருவரும் ஒன்றிணைய வாய்ப்பிருப்பதாக சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இது நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.