1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sangeetha vijay withdrawn her divorce petition

விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற சங்கீதா?.. விஜயுடன் இணைகிறாரா?!..

sangeetha vijay
நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவர் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு 2025 டிசம்பர் 24ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். விஜய் அரசியலுக்கு வந்த நிலையிலும் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருந்த நிலையில் இந்த விவகாரம் விஜயின் இமேஜை பாதித்தது.

எனவே இந்த விவகாரம் மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.  தற்போது தவெக ஆட்சிக்கு வந்து விஜய் முதலமைச்சராகவிட்ட நிலையில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த வழக்கில் ஆஜரான சங்கீதா மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். சங்கீதாவின் முடிவுக்கு விஜய் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால் இந்த விவாகரத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

 இந்த செய்தி விஜய் ரசிகர்களிடமும், பெண்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் பெண்களிடம் விஜயின் அரசியல் இமேஜ் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா.. மீண்டும் இணைகிறார்களா?