தொடர்புடைய செய்திகள்
- 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- ஏன் 10 வருஷமா பேட்டியே கொடுக்கல…. விஜய்யிடம் கேட்ட நெல்சன் – வைரல் promo!
- போராட்டக்காரர்களுக்கு பாராட்டும் எச்சரிக்கையும் விடுத்த இலங்கை அரசு
- இப்படியே ஹிஜாப், ஹலால்னு போனா இலங்கை நிலமைதான்! – கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!
- 5 கிராமி விருதுகளை வென்ற பாடகர்... குவியும் வாழ்த்து
மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது: பல்கலை நிர்வாகம் எச்சரிக்கை
மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெரியார் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு ஊடகத்திலும் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் அதை மீறி பேட்டி கொடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்
பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்த குமார் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்தே மாணவர்கள் இதுகுரித்து ஊடகங்களில் பேட்டியளித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
