1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:46 IST)

போராட்டக்காரர்களுக்கு பாராட்டும் எச்சரிக்கையும் விடுத்த இலங்கை அரசு

srilankan
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இதனால் இலங்கையில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
போராட்டத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
ஆனல் அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பாராட்டுகள் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது