திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (08:44 IST)

இப்படியே ஹிஜாப், ஹலால்னு போனா இலங்கை நிலமைதான்! – கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!

kumarasamy
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை தொடர்ந்து பல்வேறு மதரீதியான வாக்குவாதங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் சமீபத்தில் உடுப்பி கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரை தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதை தொடர்ந்து ஹலால் உணவுகளை இந்துக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சிலர் பேசி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் தொடர்ந்து இந்து – இஸ்லாமிய உறவில் பதற்றம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி “ஹிஜாப், ஹலால் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்தால், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைதான் இந்தியாவிற்கு ஏற்படும். இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே நல்லிணக்கம் இல்லாவிட்டால் அமைதி போய்விடும்” என எச்சரித்துள்ளார்.