1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New depression may found within 48 hours

48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சில பகுதிகளில் ஓரளவு மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆதிதிராவிடர், பழங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம்! – முதல்வர் அறிவிப்பு!