புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (08:33 IST)

ஒரு அழகிரி விரும்பாவிட்டாலும் இன்னொரு அழகிரி விரும்புவார்: ரஜினி அரசியல் குறித்து எஸ்.வி.சேகர்

ஒரு அழகிரி விரும்பாவிட்டாலும் இன்னொரு அழகிரி விரும்புவார்: ரஜினி அரசியல் குறித்து எஸ்.வி.சேகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அழகிரி விரும்பாவிட்டாலும் இன்னொரு அழகிரி நிச்சயம் திரும்புவார் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.,சேகர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'தான் ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நடிகர் எஸ்வி சேகர், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் எல்லாம் முடிந்து விட்டது என்றும், அவர் விரைவில் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், அவர் அரசியலுக்கு வருவதை கே.எஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி விரும்புவார் என்றும் கூறியுள்ளார்.
 
ஒரு அழகிரி விரும்பாவிட்டாலும் இன்னொரு அழகிரி விரும்புவார்: ரஜினி அரசியல் குறித்து எஸ்.வி.சேகர்
ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் முக அழகிரி இணைவார் என்று வதந்தி பரவி வரும் நிலையில், ரஜினி கட்சியில் முக அழகிரி இணைவார் என்பதை மறைமுகமாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் முக அழகிரி அவருடைய கட்சியில் இணைந்தால் திமுகவின் ஆட்சி கனவு கானல் நீராக மாறிவிடுமோ என்ற அச்சம் திமுகவினர்களிடையே இருப்பதாக கூறப்படுகிறது