திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (21:54 IST)

வறுத்தெடுக்கும் வெய்யில் : நீர்நிலைகளை நோக்கி செல்லும் மக்கள் !!!

அமெரிக்க நாட்டில் கோடையும் குளிர்ச்சியும் மாறி மாறி வருவது வாடிக்கை. இந்நிலையில் தற்போது அமெரிகாவில் , கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் செயற்கையாக ஏற்படுத்தியுள்ள அழகான நீர்நிலைகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
அமெரிக்காவின் உள்ள பிரசித்திபெற்ற மசாச்சுசெட்ஸ் மாகாணம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெப்பம் 46 டிகிரி செல்சியஸை கடந்து, சூடான வெப்பக்காற்று வீசி வருகிறது.
 
இந்நிலையில் உலக வெப்பமயமாதால் அதிமாகி வருவதால் கடுமையாக வெப்பத்தை சமாளிக்க முடியாத மக்கள்  அமெரிக்காவில் சமீபத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். 
 
இதற்கிடையே வெப்பத்திலிருந்து  மக்கள் தம் உடலை தற்காத்துக்கொள்ள அதிகம் பழரசம் அருந்தும்படியும் ,பகல் நேரங்களில் அதிகம் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.